Author Archives: chandrasekarangopalakrishnan

About chandrasekarangopalakrishnan

I am retired government servant. Living in Tamilnadu, chennai.

காவியமாய் திகழ்ந்த காவியத்தலைவன்

காவியமாய் திகழ்ந்த காஞ்சித்தலைவன்…21743005_1559201090793290_3873720855931048605_n

ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் நாசமே மிஞ்சும் என்று எச்சரித்த தீர்க்கதரிசி..

தமிழினத்தின் மாண்பு மங்கிப்போய்விடக்கூடாது என்று மாநில சுயாட்சியை வற்புறுத்தி அதற்கான உரிமை களை மீட்க போராடியவர்.. அதனால்தான் இன்று தமிழகம் பல விதங்களில் முன்னேறியி ருக்கிறது..

மாநில சுயாட்சி அதிகாரத்தை கோட்டை விட்டதால்தான் இன்னும் பல மாநிலங்களை மத்திய அரசு தன் கோரக்கரத்தால் அடக்கியாண்டு கொண்டிருக்கிறது அதிலும் வடகிழக்கு மாநிலங்களின் கதை இன்னமும் பரிதாபம்.

அவ்வளவு ஏன், நம்ம புதுச்சேரியை எடுத்துக்கொள்ளுங்கள்.. அருகில் உள்ள திண்டிவனத்திலும் கடலூரிலும் காங்கிரஸ் கட்சிக்கு பலமே இருக்காது..ஆனால் புதுச்சேரியில் பலமாக இருக்கும்..

தமிழ்கத்தில் பெரிய இயக்கங்களாக திகழும் திமுகவும் அதிமுகவும் புதுச்சேரியில் மட்டும் மூச்சு வாங்குவது ஏன்? ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்..

ஒரு கான்ஸ்ட்டபிளைக்கூட புதுச்சேரி முதலமைச்சரால் ஒன்றும் செய்துவிடமுடியாது..எல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம்..

மத்தியஅரசு போடும் பிச்சையை பொறுத்தே புதுச்சே ரிக்கு நிதியாதாரம்.. இப்படியிருக்கும்போது எவன் மாநில கட்சிகளை நம்பி போவான்..

இந்த கண்றாவிகளையெல்லாம் பார்க்கும்போதுதான் மாநில சுயாட்சியை வலியுறுத்தி பல விஷங்களில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்ந்த அண்ணாவின் பெருமை புரியவரும்..

அண்ணாவிற்கு பின்னால் வந்தவர்கள் அவரின் பற்றற்ற பாதையை அப்படியே பின்பற்றியிருந்தால் கொள்ளைக்கார அரசியல்வாதிகள் என்ற வர்க்கம் அவ்வளவாக உருவாகியிருக்காது..

மிட்டா மிராசுகளும் பண்ணையார்களும் அமர்ந்த பீடங்களில் சாமான்ய மக்களும் அமரும் வகையில் அரசியலை செதுக்கிய அற்புதமான சிற்பி அண்ணா..

தமிழினத்தின் பெருமையை உயிர் மூச்சாக சுவாசித்ததால்தான் எதையும் துணிச்சலுடன் பல சம்பிரதாயங்களை அவரால் உடைக்கமுடிந்தது..

அண்ணா முதலமைச்சர் பதவியேற்க அவரது நுங்கம் பாக்கம் வீட்டிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ரெடியாகிறார்.
நம்மையும் அழைத்துச் செல்வார் என்று மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் தயாராக இருக்கின்றனர்.

ஆனால் அண்ணாவோ, யாரையும் அழைக்காமல் ஒரு பழைய கைத்தறி துண்டை தோளில் போட்டுக்கொண்டு
காரில் ஏறி, பதவியேற்புக்கு புறப்பட்டு போய்விடுகிறார்

முதலமைச்சர்கள் பதவியேற்பதை அந்த அரங்கில் உள்ளவர்கள் மட்டுமே அன்றைக்கு கேட்கமுடியும்- ஆனால் அண்ணா முதலமைச்சராக பதவியேற்கும்போது, ”விழா அரங்கின் வெளியே கட்டுங்கடா ஒலிபெருக்கிகளை. என் பதவி பிரமாணத்தை என் சமான்ய மக்களும் கேட்கட்டும்” என்று உத்தரவு போட்டார்..

அண்ணாவின் மீது உயிரையே வைத்திருந்து அவர் பெயரிலேயே தனி இயக்கம், கொடி கண்ட எம்ஜிஆர் இதை மனதில்வைத்தே தாம் முதலமைச்சராக முதன் முதலில் பதவியேற்றபோது மக்கள் முன்னிலை யிலேயே அதனை செய்துகாட்டினார்..

இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் விட்டால் அது தமிழின் குரல்வளையை கடித்து குதறிவிடும் என்று தீர்க்கமாக நம்பியவர் அண்ணா..அதனால்தான் இந்தி திணிப்பை விரட்டி விரட்டி வேட்டையாடச் சொன்னார்.

இந்தியா முழுக்க பள்ளிகளில் இங்கிலீஷ் கற்பிக்கப்படும்போது அது ஏன் தொடர்பு மொழியாக இருக்கக்கூடாது? உலகத்தொடர்புக்காக இங்கிலீஷையும் உள்நாட்டு தொடர்புக்காக இந்தியையும் தமிழர்கள் ஏன் கற்கவேண்டும்?

பெரிய நாய் நுழைவதற்காக பெரிய கதவும் சிறிய நாய்க்காக சிறிய கதவும் என இரண்டு கதவுகளையா வைப்போம்? பெரிய கதவை வைத்துவிட்டால் அதில் சிறிய நாயும் பெரிய நாயும் வந்துபோகப்போகின்றன என்று சொன்னவர் அறிஞர் அண்ணா…

மண்ணின் மைந்தன் என்ற முறையில் அவரின் பிறந்த நாளான இன்று, கர்வத்தோடே வணங்குகிறோம்..

நன்றி : ஏழுமலை வெங்கடேசன் (முகநூல்)
Advertisements
Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா? — சமூகத்தின் பட்டகம்

சந்திரமோகன் 4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும். 1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். “இரும்பாலை வருகிறது , […]

via சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா? — சமூகத்தின் பட்டகம்

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?

தேவை மீண்டும் “ஒரு தேவதாஸ்”

வே.மதிமாறன்

காதலித்தால் ‘அப்பன் ஆம்பள’ வெட்டுறான். காதலிக்காவிடில் ‘ரவுடி ஆம்பள’ வெட்டுறான்.
அட கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?
1 September

‘பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற லீலைகளே கடவுளுக்கான அழகு. அதுதான் பெண்களை மயக்கும் வழி’ என்ற புராண, இதிகாச வழியாகச் சொல்லப்பட்ட ஆணாதிக்கக் கலை, இலக்கியங்களின் தொடர்ச்சியாகதான்;

கண்ணனின், முருகனின் வாரிசுகளாக எம்.ஜீ.ஆர், சிவாஜி – ரஜினி, கமல், – விஜய் , அஜித் – தனுஷ், சிம்பு என்று ஈவ்டீசிங் செய்து நாயகிகளை ‘மயக்கி’ கடவுள்களைப் போல் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
2 September

‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ பாலாவை விட,
காதலிக்க மறுத்தபோதும், பெண்ணின் நினைவுகளில் தாடி வளர்த்து அவளுக்காகத் தன் உயிரை தியாகம் செய்த ‘ஒரு தலை ராகம்’ டி. ராஜேந்தர் ஆயிரம் மடங்கு முற்போக்கானவர்.⁠⁠⁠⁠
2 September

‘என்ன மச்சான் உன் ஆளு ஏமாத்திட்டு போயிட்டாளா.. தேவதாஸ் மாதிரி ஆயிட்டே?’

இதுபோன்ற உரையாடல்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கேட்க முடிவதில்லை.

1953 ல் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படம், தாத்தா, அப்பா, பேரன் என்று மூன்று தலைமுறை காதலன்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.

‘சூழல் காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்ட,
தன் காதலியை நினைத்து நினைத்துத் தன்னை வருத்திக் கொள்கிறவன் தான் உண்மையான காதலன்’ என்கிற உணர்வை ஒவ்வொரு ஆணிடமும் அது…

View original post 59 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வாக்குப்பதிவு அறசீற்றம்- நிர்வாண விரும்பிகளுக்கு ஆடை அணிந்தோரின் வேண்டுகோள்.

சென்னைக்காரர்களைப் பற்றி ஒரு தர்மபுரிக்காரர் திட்டி போட்ட பதிவு ஒன்று வாட்ஸ்சப் குழுக்களில் உலவுகிறது. இதற்காகவா உங்களுக்கு வெள்ளத்தின்போது அரிசி போர்வையெல்லாம் கொடுத்தோம் எனும் அங்கலாய்ப்பில் தொடங…

மூலம்: வாக்குப்பதிவு அறசீற்றம்- நிர்வாண விரும்பிகளுக்கு ஆடை அணிந்தோரின் வேண்டுகோள்.

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?

THE TIMES TAMIL

ஆண்டு: 2003

ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை

காதலர்கள்:

முருகேசன் (தலித்)
கண்ணகி (வன்னியர்)

என்ன கதை அது?:

இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது. பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர். விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர். செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு ஊர் நடுவிலேய வைத்து எரிக்கப்பட்டனர் அந்தக் காதலர்கள்.

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

ஆதவன் தீட்சண்யா

சாமிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக் கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப் பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவவூட்டுக்கு (வண்ணான்குடி காடு- குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமி ருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்.

வேல்முருகன்: அன்னிக்கு காலையில் ஒரு…

View original post 2,460 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? : ஆதவன் தீட்சண்யா

THE TIMES TAMIL

ஆதவன் தீட்சண்யா

(‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்)

சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகுது- யார் யாரோடு கூட்டு சேர்ந்து யாரை எதிர்க்க / ஆதரிக்கப் போறாங்கன்னு குறிசொல்லி, எந்தக்கூட்டணி பலமா இருக்கு? பலமா தெரியற கூட்டணியோட பலவீனம் என்ன, பலவீனமா தெரியற கூட்டணியோட பலம் என்னன்னு விலாவாரியா விளங்கவைக்கிற டிவி விவாதங்களை அன்றாடம் அலசிப் பார்த்து, வாக்காளர்களை வென்றெடுக்க கையாள வேண்டிய பிரச்சார உத்திய நான் ஆதரிக்கிற கூட்டணிக்கு தெரிவித்து அதைப்பற்றி நல்லவிதமா நாலுவார்த்தையும் மற்ற கூட்டணி ஆளுங்க வைக்கிற விமர்சனம் அவதூறுகளுக்கெல்லாம் பொளேர்னு பதிலடியும் எழுதி, தளி ராமச்சந்திரன் தொடர்பான கேள்விக்கு மழுப்பலா பதில் சொல்லி, வைகோ பேசியதையும் விஜயகாந்த் பேசாததையும் கூட்டணிதர்மத்துக்காக(?) சகிச்சுக்கிட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்வரை தொகுதிவாரியா கண்காணிச்சு எங்கே யார் ஜெயிக்கப்போறாங்கன்னு ஞாபகம் வச்சிக்கிட்டு, அஞ்சுப்பைசாவுக்கு பெறுமானமில்லேன்னாலும் அலட்டலா வெளியாகும் தேர்தல் அறிக்கைகளைப் படிக்காமலே படிச்சி விளங்கிக்கிட்ட பாவனையோட ஆதரிச்சும் எதிர்த்தும் அபிப்ராயம் தெரிவிச்சு, பொதுக்கூட்டத்துக்கு வர்ற சனங்களை ஓட்டாக நம்பி ஏமாறப்போகிறவர்களின் முகத்தின் விகாரத்தை அச்சமில்லாம கற்பனை செய்து, நடுநிலையாளர்னு சொல்லுறவங்க போட்ட நாடகத்தை நக்கலடிச்சு, பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிரா கண்டனம் முழங்கி, தேர்தலுக்கு முந்தின…

View original post 666 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்

’சபாஷ் சக்கிலியர்’ பெயர் வைப்பரா?

வே.மதிமாறன்

13254665_1002647616471467_6075004334720533280_o
இந்துமதமே தனித்தனி ஜாதி வழக்கம்தான். இப்படியான பலநூறு ஜாதிகளை இரண்டு சமயங்கள் தனிதனியாகப் பிரித்து இயக்கி இருக்கிறது. மிக நுட்பாக இயங்கிய முறையின் மிச்சசொச்ச வழக்கங்கள் இன்றும் ஆதிக்கஜாதி உணர்வாளர்களிடம் இருக்கிறது.

ஜாதி படிநிலையில் ஒரேஅந்தஸ்தில் இருந்தாலும், வரலாறில் சைவம்xவைணவம் என்கிற சமயச்சண்டை, அதிகாரத்திற்கான ஆதிக்கஜாதிகளுக்குள்ளான சண்டைதான். பி.ஜே.பி. உள்ளே நடக்கும் பதவி சண்டை மாதிரி.

‘ஓம் நமசிவாய’ எனும் பஞ்சாட்சரத்திற்கும் ‘ஓம் நமோ நாராயாணாய’ எனும் அஷ்டாஷரத்திற்கும் நடந்த சண்டை. சிவன்xவிஷ்ணு யார் பெரியவர் என்பதற்காக மாறிமாறி எழுதிக் கொள்ளப்பட்ட கதைகளே இதற்குச் சாட்சி.

‘சிவனின் விஸ்வரூபததைத் தரிசிப்பதற்காக அவர் பாதம் நோக்கி பயணித்தவர்தான் விஷ்ணு’ என்கிற கதை சிவனின் பெருமைக்காக மட்டுமல்ல, விஷ்ணுவை பன்றி என்று இழிவாக சித்திரிக்ககவும்.
இந்தச் சமயச் சண்டையில் புராணங்களில் சிவன் மற்றும் சைவர்களின் கை ஓங்கி இருந்தாலும், இதிகாசங்களிலோ வைணவர்களின் செல்வாக்கு மட்டும்தான்.

இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் வைணவ பெருமை உடையவை. இரண்டிலும் ராமன், கிருஷ்ணன் வைணவக் கடவுள்கள்தான் நாயகர்கள்.
அனால்தான் பெரியார் இயக்கம் ராமாயணத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு முன்,
சைவ சமயத்தார் ராமாயண எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்கள். மறைமலையடிகளைப் போல்.

ஏனென்றால், ராமாயணத்தின் வில்லன் தீவிர சிவபக்தனான ராவணன். பிரகலாதன் கதையும் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை மூட்டிய வைணவப் பெருமை. அசுரன் இரணியன் சிவபக்தன். அதனாலேயே குடலை மாலையாக்கிக் கொண்டான் நரசிம்மன்.
ஆனாலும் வைணவத்தில் உயர்வானவர்கள் அய்யங்கார்கள்.
சைவத்தில்…

View original post 763 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மலையும்,அலையும்.

From new books and viral success to high-profile podcasts, bloggers are accomplishing great things every day.

via Three WordPressers Making a Splash — WordPress.com News

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

‘மதிமாறன் பேச்சை நிறுத்தச் சொல்லுங்கள்’

வாலாஜா பேட்டை பொதுக்கூட்ட வழிகாட்டல்.

வே.மதிமாறன்

நேற்று வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திற்குள் 40 நிமிடங்களைத் தாண்டி நான் பேசி கொண்டு இருந்துபோது, இன்ஸ்பெக்டர் மேடையை நோக்கி, என்னை பார்த்தாவறே 10 போலிஸ்காரர்களோடு வேகமாக வந்தார். வந்தவர், மேடையில் அமர்ந்திருந்த, கூட்டத்தை நடத்திய தோழர் நாகராஜனை அழைத்து எதையோ சொன்னார். நான் பேசிக் கொண்டே இருந்தேன்.

இன்ஸ்பெக்டர், “மதிமாறனை இந்து மதத்தை, ஜாதியை திட்டி பேசவேணான்னு சொல்லுங்க. இந்து அமைப்பைச் சேர்ந்த 200 பேர் அவர் பேச்சை நிறுத்தச் சொல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்“ என்றிருக்கிறார்.

செய்தி என் காதுக்கு வந்தவுடனேயே அய்யப்பன் கதையை ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு முன்னால் நான் பேச ஆரம்பித்த 30 நிமிடங்களுக்குள் ஒரு கும்பல்,
‘பெருமாள் நாமம்’ கொண்டு போவதாகச் சொல்லி மேடைக்கு அருகில் வந்து சரமாரியாக பட்டாசு வெடித்து தொல்லை செய்தது. நான் பேச்சை நிறுத்தி தண்ணீர் குடித்து விட்டு, ‘எனக்கு தண்ணீர் குடிப்பதற்கு அவகாசம் கொடுத்தவர்களுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்தேன்.
அந்தக் கும்பல்தான், நேராக காவல் நிலையத்தை முற்றுகையிட்டிருக்கிறது.

‘புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் பவுத்த மதம் மாறினார்?’ என்ற தலைப்பில் இந்து மதத்தை அம்பலப்படுத்தாமல் ஆதரித்தா பேச முடியும்? தொல்லைகளைத் தாண்டி தொடர்ந்து பேசினோம்.

காவல்துறை அதிகாரி ‘அப்படி பேச வேண்டாம்’ என்று தோழர்களிடம் சொன்னாலும், அதன் பிறகும் இந்து மதத்தை அம்பலப்படுத்தி பேசியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், பாதுகாப்பாக இருந்தார்கள்.

கூட்டம் முடிந்த பிறகு நான் காவல்துறை அதிகாரியிடமும் காவலர்களிடமும், ‘என்னால்…

View original post 83 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?

Source: உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்?

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.